O/L பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியீடு

2019 க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியீடு

by Staff Writer 19-02-2021 | 2:46 PM
Colombo (News 1st) 2019 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்தார். சரியான பரீட்சை சுட்டெண்ணை உள்ளீடு செய்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார். இது தொடர்பிலான மேலதிக தகவல்களை 0112 784 557 அல்லது 011 2 784 208 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்