தாவரங்கள், விலங்கினங்கள் குறித்து கணக்கெடுப்பு

பாதுகாக்கப்பட்ட தாவரங்கள், விலங்கினங்கள் குறித்து நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு

by Staff Writer 19-02-2021 | 3:49 PM
Colombo (News 1st) நாட்டில் பாதுகாக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தற்போதைய நிலை குறித்து நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பை நடத்த வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தரவுகள், கடந்த காலங்களில் சரியான முறையில் புதுப்பிக்கப்படவில்லை என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார். இதற்கமைய, பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தின் கீழ், கணக்கெடுப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக சூழலியலாளர்கள் மற்றும் சூழலை பாதுகாக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார். நாட்டில் பாதுகாக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த செம்பட்டியல் தரவு புத்தகம் புதுப்பிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அண்மைக்காலமாக இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாக குறித்த தரவு புத்தகம் சரியாக புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.