செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது Perseverance 

நாசாவின் Perseverance விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது

by Bella Dalima 19-02-2021 | 4:37 PM
Colombo (News 1st) நாசாவின் Perseverance என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பது பற்றிய ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் Perseverance Rover விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும் இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட Perseverance விண்கலம் வெள்ளிக்கிழமை தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.