தேங்காய் விலை அடுத்த மாதம் குறையும்: தெங்கு அபிவிருத்தி சபை

தேங்காய் விலை அடுத்த மாதம் குறையும்: தெங்கு அபிவிருத்தி சபை

தேங்காய் விலை அடுத்த மாதம் குறையும்: தெங்கு அபிவிருத்தி சபை

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2021 | 4:00 pm

Colombo (News 1st) தேங்காயின் விலை அடுத்த மாத நடுப்பகுதியில் குறைவடையுமென தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 80 தொடக்கம் 120 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெங்கு அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் பியசேன எதிரிமான்ன தெரிவித்தார்.

விலை கட்டுப்பாட்டிற்காக குறிப்பிட்ட வகை தேங்காய் இறக்குமதிக்காக வர்த்தகர்கள் 10 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்களில் இருவர் மாத்திரமே இறக்குமதி செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளமையினால் தாம் இறக்குமதியை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக ஏனைய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், மார்ச் மாதத்திற்குள் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பியசேன எதிரிமான்ன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்