கெரவலப்பிட்டிய கழிவகற்றல் முகாமைத்துவ பிரிவில் தீ பரவல்

by Staff Writer 18-02-2021 | 6:55 PM
Colombo (News 1st) முத்துராஜவெல - கெரவலப்பிட்டிய கழிவகற்றல் முகாமைத்துவ பிரிவில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கழிவுப்பொருள் முகாமைத்துவத் தொகுதியின் 4 ஏக்கர் பரப்பில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சேகரிக்கும் பகுதியில் தீ பரவியுள்ளது. விமானப்படையினர் ஹெலிகொப்டரின் ஊடாக நீரை விசிறி தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் காற்றுடனான வானிலை காரணமாக தீ பரவும் வேகம் அதிகரித்துள்ளது.