ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு 3 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு 3 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு 3 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2021 | 8:06 pm

Colombo (News 1st) கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சட்ட மா அதிபர் நேற்று (17) பொலிஸ்மா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைக்கு ஏற்ப சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாத உறுப்பினர் ஒருவருடன் நெருங்கி செயற்பட்டு, அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் தடுத்து வைக்கப்பட்ட வண்ணாத்துவில்லு மதரஸா பாடசாலையின் அதிபர் மொஹமட் ஷகீர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்