நிலத்தடி நீரை பாதிக்கும் பெக்கோ இயந்திரங்களூடான மாணிக்கக்கல் அகழ்வு 

நிலத்தடி நீரை பாதிக்கும் பெக்கோ இயந்திரங்களூடான மாணிக்கக்கல் அகழ்வு 

நிலத்தடி நீரை பாதிக்கும் பெக்கோ இயந்திரங்களூடான மாணிக்கக்கல் அகழ்வு 

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2021 | 9:29 am

Colombo (News 1st) அதிக சனத்தொகை உள்ள பகுதிகளில் பெக்கோ (Backhoe) இயந்திரங்களை பயன்படுத்தி மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்வதை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கக்கூடும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெக்கோ இயந்திரங்கள் ஊடாக மாணிக்கக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதால், கிணறுகளின் நீர் மட்டமும் குறைவடைதாக நீர் வழங்கல் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்