கெரவலப்பிட்டிய கழிவகற்றல் முகாமைத்துவ பிரிவில் தீ பரவல்

கெரவலப்பிட்டிய கழிவகற்றல் முகாமைத்துவ பிரிவில் தீ பரவல்

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2021 | 6:55 pm

Colombo (News 1st) முத்துராஜவெல – கெரவலப்பிட்டிய கழிவகற்றல் முகாமைத்துவ பிரிவில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கழிவுப்பொருள் முகாமைத்துவத் தொகுதியின் 4 ஏக்கர் பரப்பில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சேகரிக்கும் பகுதியில் தீ பரவியுள்ளது.

விமானப்படையினர் ஹெலிகொப்டரின் ஊடாக நீரை விசிறி தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் காற்றுடனான வானிலை காரணமாக தீ பரவும் வேகம் அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்