by Staff Writer 17-02-2021 | 7:31 PM
Colombo (News 1st) இலங்கையில் நிலவும் சீரற்ற நிதி நிலைமை காரணமாக தேசிய நிதி நிறுவனங்களுக்கே கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான Fitch Ratings தெரிவித்துள்ளது.
இலங்கை நிறுவனங்களின் வலுவான வணிகத்தன்மை, நிதி திரவத்தன்மை மற்றும் அரச அழுத்தங்களிலிருந்து விடுபடும் தன்மை என்பனவே இந்த நிலைக்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2020 நவம்பர் மாதம் இலங்கையின் சர்வதேச நிதி தரப்படுத்தலை B நெகட்டிவிலிருந்து (B-) CCC வரை Fitch Ratings குறைத்தது.
சர்வதேச கடன் பெறல், சர்வதேச முதலீடுகளை நாட்டிற்கு கவர்ந்திழுத்தல், நிதி கிடைத்தல் போன்ற விடயங்களில் இந்த Fitch Ratings அறிக்கை தாக்கம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.