இலங்கை மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் விஜயம்

இலங்கை அணி 23 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் விஜயம்

by Bella Dalima 17-02-2021 | 3:07 PM
Colombo (News 1st) இலங்கை அணி இம்மாதம் 23 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் மூன்று T20 போட்டிகள், மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் முதலாவது T20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி Antigua-வில் ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை Sir Vivian Richards மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி மார்ச் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 14 ஆம் திகதி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.