திண்மக் கழிவு மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

இலங்கையின் முதலாவது திண்மக் கழிவு மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

by Staff Writer 17-02-2021 | 4:30 PM
Colombo (News 1st) இலங்கையின் முதலாவது திண்மக் கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது. கெரவலப்பிட்டியவில் இலங்கையின் முதலாவது திண்மக் கழிவு மின் உற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த திண்மக் கழிவு மின் உற்பத்தி நிலையத்தில் நாளொன்றுக்கு 600-800 தொன் நகர திண்மக் கழிவை பயன்படுத்தி தேசிய மின் கட்டமைப்பிற்கு 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் திண்மக் கழிவை அகற்றுவதற்கு இதன் மூலம் நிலையான தீர்வொன்று ஏற்படுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திற்கும் இத்திட்டம் நிலையான தீர்வாக அமையும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்