by Bella Dalima 17-02-2021 | 3:14 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் ஃபப் டு ப்லசிஸ் (Faf du Plessis) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளார்.
36 வயதான Faf du Plessis 2012 ஆம் ஆண்டில் டெஸ்ட் அறிமுகம் பெற்றார்.
69 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாபிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்திய Faf du Plessis, 4,163 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இவற்றில் 10 சதங்களும் 21 அரைச்சதங்களும் அடங்குகின்றன.