சபாநாயகருக்கும் 24 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டது

சபாநாயகருக்கும் 24 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2021 | 5:08 pm

Colombo (News 1st) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு இன்று கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.

நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் வைத்து சபாநாயகருக்கு COVID-19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இதன்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் அங்கு சென்றிருந்தார்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த 24 உறுப்பினர்களுக்கு இன்று நண்பகல் 12 மணி வரை Oxford Astrazeneca Vaccine COVID-19 தடுப்பூசி ஏற்றப்பட்டதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு பணிப்பாளர் ஷான் விஜேதுங்க குறிப்பிட்டார்.

COVID-19 தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு சபாநாயகர் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய உயர்ஸ்தானிகருடன் நீண்ட நேர கலந்துரையாடலிலும் சபாநாயகர் இன்று ஈடுபட்டதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு பணிப்பாளர் ஷான் விஜேதுங்க குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்