COVID-19: 1018 பேர் இன்று குணமடைந்தனர்

COVID-19: 1018 பேர் இன்று குணமடைந்தனர்

by Staff Writer 16-02-2021 | 4:47 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1018 பேர் இன்று குணமடைந்துள்ளனர். COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70,429 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 76,428 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 5,596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் நாட்டில் 403 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.