பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமனம்

by Staff Writer 16-02-2021 | 3:00 PM
Colombo (News 1st) பேராசிரியர் சன்ன ஜயசுமன பதில் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சன்ன ஜயசுமன ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் உள்ளார். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மீண்டும் சேவைக்கு சமூகமளிக்கும் வரை, அமைச்சின் பொறுப்புகளை ஆற்றுவதற்காக சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டார். ரொஷான் ரணசிங்க இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்