by Staff Writer 16-02-2021 | 1:37 PM
Colombo (News 1st) வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
விலைமனு கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு அதனை வழங்குவதற்கு அமச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ மின்சக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்காதமையால் அந்த தீர்மானம் தொடர்ந்தும் வலுவில் உள்ளது என்பதாகவே நினைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கேள்வி - ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா?
உதய கம்மன்பில - பாதுகாப்பை அவ்வாறே பேணுமாறு ஜனாதிபதி கூறியிருக்கின்றமையால் இது ஒரு பிரச்சினையாக மாற்றமடையாது என்றார்.