மேற்கு முனைய அபிவிருத்திக்கான முதலீட்டாளர்களை பெயரிடுமாறு இந்தியா, ஜப்பானுக்கு அறிவிப்பு 

மேற்கு முனைய அபிவிருத்திக்கான முதலீட்டாளர்களை பெயரிடுமாறு இந்தியா, ஜப்பானுக்கு அறிவிப்பு 

மேற்கு முனைய அபிவிருத்திக்கான முதலீட்டாளர்களை பெயரிடுமாறு இந்தியா, ஜப்பானுக்கு அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2021 | 7:55 am

Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திக்கான முதலீட்டாளர்களை பெயரிடுமாறு இந்தியா மற்றும் ஜப்பானுக்கு அறிவிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, நேற்று (15) முதல் தடவையாக கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக குழுவின் தலைவரும் துறைமுகங்கள் அமைச்சின் செயலாளருமான யூ.டி.சி. ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஜப்பான் தூதரகம் ஆகியவற்றிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை மீண்டும் குழு கூடவுள்ளது.

7 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவின் அறிக்கையை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் துறைமுகங்கள் அமைச்சின் செயலாளருமான யூ.டி.சி. ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்