பெப்ரவரி இறுதியில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது – GMOA

பெப்ரவரி இறுதியில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது – GMOA

பெப்ரவரி இறுதியில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது – GMOA

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2021 | 12:30 pm

Colombo (News 1st) பெப்ரவரி மாதத்தின் இறுதியளவில் நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 20,000 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியதாக வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதத்திலிருந்து பெப்ரவரி ஆரம்பம் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்ட 92 மாதிரிகளை பரிசோதித்து பார்த்ததன் பின்னரே புதிய வகை கொரோனா வைரஸ் பரவிய நோயாளர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டதாக வைத்தியர் இதன்போது கூறினார்.

92 மாதிரிகளைப் பார்க்கும் போது 16 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தால் இந்த 20,000 பேரில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பது எவ்வாறு அர்த்தப்படும் என்பது தமக்கு தெரியாது என கூறிய வைத்திய நிபுணர், ஏனென்றால் சில தகவல்கள் வெளிவரவில்லை என தெரிவித்தார்.

இதனடிப்படையில், நாட்டில் குறிப்பிடத்தக்களவு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்பது வெளிவந்த தரவுகளின் மூலம் தெரியவருகின்றதாக வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்