போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளர் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளர் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளர் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2021 | 2:53 pm

Colombo (News 1st) துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் அசங்க என்பவரின் உதவியாளர் ஒருவர் கொழும்பு – வௌ்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின், 06 இலட்சம் ரூபா பணம் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, வவுனியாவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் 30 கிராம் ஹெரோயினுடன் 34 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ரிஷ்வி என்பவரின் உதவியாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்