தரம் 5 வெட்டுப்புள்ளி விவகாரம்: அறிக்கை கையளிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விவகாரம்: அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு

by Staff Writer 14-02-2021 | 3:06 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் தொடர்பிலான சிக்கல் குறித்து கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. வெட்டுப்புள்ளிகளை குறைப்பதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் அதனை தவிர்ப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் ஆகிய அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது வெட்டுப்புள்ளி குறித்த பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும் அவர் கூறினார். அறிக்கையை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தினால் இந்த பிரச்சினைக்கான தீர்மானம் எட்டப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். அதுவரை, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும் தரம் 6 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.