பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி 

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை

by Staff Writer 14-02-2021 | 2:11 PM
Colombo (News 1st) பல்வேறு கட்டங்களின் கீழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான யோசனையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், முதற் கட்டத்தில் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் மற்றும் பல் மருத்துவ பீடங்களில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. 5,800 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் கீழ் உள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் 140,000 மாணவர்கள் தற்போது கல்வி கற்கின்றனர். இதனிடையே, கொரோனா தொற்று நிலைமையால் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளதுடன் Online ஊடாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.