NTMI தலைமை காரியாலயத்தை நாளை மூட தீர்மானம் 

நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன தலைமை காரியாலயத்தை நாளை மூட தீர்மானம் 

by Staff Writer 14-02-2021 | 7:30 PM
Colombo (News 1st) நுகேகொடையில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தை நாளைய தினம் (15) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தலைமைக் காரியாலயத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர், டாக்டர் ஷவேந்திர கமகே தெரிவித்துள்ளார். இதற்கிணங்க நாளை மருத்துவச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளவர்களுக்கு விடயம் தொடர்பில் தொலைபேசி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே, கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தேசிய போக்குவரத்து மருத்து நிறுவனத்தின் காலி அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய மாவட்டங்களிலுள்ள அலுவலகங்கள் வழமை போன்று இயங்குவதாக நிறுவனத்தின் தலைவர், டாக்டர் ஷவேந்திர கமகே தெரிவித்துள்ளார்.