கொரோனா தொற்றினால் முன்னாள் சபாநாயகர் ஒருவர் பலி

கொரோனா தொற்றுக்குள்ளாகி முன்னாள் சபாநாயகர் ஒருவர் உயிரிழப்பு 

by Staff Writer 14-02-2021 | 9:18 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார இன்றிரவு (14) காலமானார். அமைச்சராகவும் மாகாண ஆளுநராகவும் மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றியிருந்த W.J.M. லொக்குபண்டார தமது 81 ஆவது வயதில் காலமானார். இலங்கை அரசியலில் சிறப்பிடம் பெற்றிருந்த அன்னார், நாட்டுப்பற்றுள்ள அரசியல்வாதியாக அனைவராலும் போற்றப்பட்டவராவார்.