எல்லைகளை மீள திறக்கும் தென்னாபிரிக்கா

எல்லைகளை மீள திறக்கும் தென்னாபிரிக்கா

by Staff Writer 14-02-2021 | 5:41 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றினை கருத்திற்கொண்டு கடந்த மாதம் மூடப்பட்ட 20 எல்லைப் பகுதிகளை நாளை (15) மீள திறக்கவுள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவின் அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் நேற்று (13) எடுக்கப்பட்டுள்ளது. Zimbabwe, Botswana, Mozambique, Namibia, Lesotho மற்றும் Eswatini ஆகிய பகுதிகளே இவ்வாறு திறக்கப்படவுள்ளன. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அங்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 14 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 47,000 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தென்னாபிரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.