மரணத்தில் முடிந்த கைகலப்பு ; கிளிநொச்சியில் சம்பவம்

மரணத்தில் முடிந்த கைகலப்பு ; கிளிநொச்சியில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2021 | 3:43 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் பகுதியில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (14) காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே வாள் வெட்டில் முடிந்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான ​மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்