கஸகஸ்தானில் இருந்து 164 சுற்றுலாப் பயணிகள் வருகை

by Staff Writer 13-02-2021 | 7:27 PM
Colombo (News 1st) சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்றிட்டத்தின் கீழ் மற்றொரு விமானம் கஸகஸ்தானின் அல் மார்டி விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஹம்பாந்தோட்டை மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 164 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்தனர். நாட்டில் தங்கியுள்ள 118 சுற்றுலாப் பயணிகள் இந்த விமானத்தில் திரும்பிச் செல்லவுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் கஸகஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்த மூன்றாவது விமானம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.