இன்று 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 13-02-2021 | 7:18 PM
Colombo (News 1st) நாட்டில் இன்று மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 74,484 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 67,831 பேர் குணமடைந்துள்ளனர். அதன் பிரகாரம், 6 ,269 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 384 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.