வென்னப்புவயில் கோழிகளை வேட்டையாடி வந்த மீன்பிடிப் பூனை பிடிபட்டது

வென்னப்புவயில் கோழிகளை வேட்டையாடி வந்த மீன்பிடிப் பூனை பிடிபட்டது

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2021 | 2:21 pm

Colombo (News 1st) வென்னப்புவ பகுதியில் நெடுங்காலமாக கோழிகளை வேட்டையாடி வந்த மீன்பிடிப் பூனையொன்றை அப்பிரதேச மக்கள் பொறி வைத்துப் பிடித்துள்ளனர்.

FISHING CAT எனப்படும் குறித்த பூனை மனிதர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொறியில் சிக்கிய பூனையை மக்கள் புத்தளம் வன ஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டு பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த மீன்பிடிப் பூனை புத்தளம் – தப்போவ சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்