ஆங் சான் சூ கி உள்ளிட்ட அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு ஐ.நா வலியுறுத்தல்

ஆங் சான் சூ கி உள்ளிட்ட அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு ஐ.நா வலியுறுத்தல்

ஆங் சான் சூ கி உள்ளிட்ட அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு ஐ.நா வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2021 | 3:12 pm

Colombo (News 1st) ஆங் சான் சூ கி உள்ளிட்ட அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்கள் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டாம் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

மியன்மார் தொடர்பில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஒருமித்த கருத்தில் இருந்து விடுபடுவதாக ரஷ்யாவும் சீனாவும் தெரிவித்துள்ளன.

இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பில் பொருளாதார தடைகள், பயணத்தடைகளை விதிக்குமாறு மியன்மாருக்கான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணையாளர் வலியுறுத்தியதை தொடர்ந்து இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாதது என மியன்மார் தூதுவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்