அங்கொட லொக்காவின் உறவினர்களின் இரத்த மாதிரிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு

அங்கொட லொக்காவின் உறவினர்களின் இரத்த மாதிரிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு

அங்கொட லொக்காவின் உறவினர்களின் இரத்த மாதிரிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2021 | 2:58 pm

Colombo (News 1st) இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அவரது உறவினர்கள் இருவரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்கா தொடர்பாக DNA பரிசோதனை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் கோயம்புத்தூரில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்கா என்பவர் இந்தியாவில் பிரதீப் சிங் என்ற பெயரில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்