by Staff Writer 12-02-2021 | 2:37 PM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டிற்கான IPL கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வீரர்களுக்கான ஏல விற்பனை நேற்று (11) நடைபெற்றது.
லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் Jaffna Stallions அணிக்காக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்தும் இந்த ஏல விற்பனை பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான IPL கிரிக்கெட் தொடரின் ஏல விற்பனை எதிர்வரும் 18 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்த ஏல விற்பனையில் 164 இந்திய வீரர்களும் 125 வெளிநாட்டு வீரர்களும் 03 அங்கத்துவ நாடுகளை சேர்ந்த வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட இறுதி ஏல விற்பனை பட்டியலில் 9 இலங்கை அணி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் Jaffna Stallions அணிக்காக விளையாடிய யாழ்ப்பாணத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்தும் இந்த ஏல விற்பனையில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தொடரின் சிறந்த வீரராக தெரிவான வனிந்து ஹசரங்க , Jaffna Stallions அணித்தலைவர் திசர பெரேரா ஆகியோரும் இந்த ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியின் சகலதுறை வீரர்களான தசுன் சானக்க , இசுரு உதான ஆகியோரும் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, துஷ்மந்த சமீர, அறிமுக வீரர்களான கெவின் கொத்திகொட, மஹீஸ் தீக்ஸன ஆகியோரும் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.