தடுப்பூசி கொள்வனவிற்கு 50மில்லியன் டொலர் ஒதுக்கீடு

COVISHIELD தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய 50 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு

by Staff Writer 12-02-2021 | 2:47 PM
Colombo (News 1st) இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் Oxford Astrazeneca COVISHIELD தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிதி மூலம் 09 மில்லியன் COVID-19 தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் S.R.ஆட்டிகல தெரிவித்தார். இராஜதந்திர மட்ட நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படும் என அவர் கூறினார். இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நாளாந்தம் 6 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.