கூட்டுறவு சங்கங்கள் ஊடாக நெல் கொள்வனவு ஆரம்பம்

கூட்டுறவு சங்கங்கள் ஊடாக நாளை (13) முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

by Staff Writer 12-02-2021 | 4:57 PM
Colombo (News 1st) கூட்டுறவு சங்கங்கள் ஊடாக நாளை (13) முதல் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது. வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களில் நாளை இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கூட்டுறவு, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினூடாக கடன் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். கொள்வனவு செய்யப்படும் நெல்லை கூட்டுறவு சங்கங்களுடன் தொடர்புடைய அரிசி ஆலைகள் மற்றும் தனியார் ஆலைகளுக்கு வழங்கி அரிசியாக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனூடாக பெறப்படும் அரிசியை நியாயமான விலையில் கூட்டுறவு கடைகள், சதொச ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டினார்.