by Bella Dalima 12-02-2021 | 3:10 PM
Colombo (News 1st) பிரித்தானியாவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கொழும்பு, அவிசாவளை, பியகம, வவுனியா ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்களிடம் பெறப்பட்ட 92 மாதிரிகளைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.