பதுளை எக்கிரியவில் சிறிய அளவில் நில அதிர்வு

பதுளை எக்கிரியவில் சிறிய அளவில் நில அதிர்வு

பதுளை எக்கிரியவில் சிறிய அளவில் நில அதிர்வு

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2021 | 8:28 pm

Colombo (News 1st) பதுளை – லுணுகல, எக்கிரிய பகுதியில் இன்று அதிகாலை சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 4.53 அளவில் சிறு நில அதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.

பல்லேகல மற்றும் ஹக்மன நில அதிர்வு மத்திய நிலையங்களில் இன்றைய அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, கடந்த மாதம் 31 ஆம் திகதியன்றும் எக்கிரிய பகுதியை அண்மித்து சிறு அளவிலான நில அதிர்வு பதிவானமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்