நெல் சந்தைப்படுத்தல் சபையில் பாரிய மோசடி: அதிகாரிகள் அறுவர் சேவை இடைநிறுத்தம்

நெல் சந்தைப்படுத்தல் சபையில் பாரிய மோசடி: அதிகாரிகள் அறுவர் சேவை இடைநிறுத்தம்

நெல் சந்தைப்படுத்தல் சபையில் பாரிய மோசடி: அதிகாரிகள் அறுவர் சேவை இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2021 | 3:45 pm

Colombo (News 1st) நெல் சந்தைப்படுத்தல் சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடி தொடர்பில் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் 06 பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்ற, அமைச்சின் உத்தியோகத்தர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்தபோதும், அதனை விற்பனை மற்றும் களஞ்சியப்படுத்திய போதும் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதி பொது முகாமையாளர்கள் இருவர், மாவட்ட முகாமையாளர்கள் 4 பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்