கொழும்பு பங்குச்சந்தையில் ASPI விலைச்சுட்டி சடுதியாக அதிகரிப்பு

கொழும்பு பங்குச்சந்தையில் ASPI விலைச்சுட்டி சடுதியாக அதிகரிப்பு

கொழும்பு பங்குச்சந்தையில் ASPI விலைச்சுட்டி சடுதியாக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2021 | 5:10 pm

Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தை வரலாற்றில் முதற்தடவையாக ASPI (All Share Price Index) எனப்படும் அனைத்து பங்குகளுக்குமான விலைச்சுட்டி இன்று அதிகரித்துள்ளது.

அதற்கமைய, 5.1 வீத அதிகரிப்புடன் ASPI விலைச்சுட்டி 387.19 வரை அதிகரித்துள்ளது.

S&P SL 20 விலைச்சுட்டியும் இன்று அதிகரித்துள்ளது. S&P SL 20 விலைச்சுட்டி 140.96 வரை அதிகரித்து 3180.24 ஆக பதிவாகியுள்ளது.

பங்குச்சந்தையின் நாளாந்த புறழ்வு 5170.5 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில், பங்குகளின் விலைச்சுட்டி இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.

S&P SL 20 விலைச்சுட்டி நேற்று இரண்டு சந்தர்ப்பங்களில் 7.5 வீத வீழ்ச்சி அடைந்ததுடன், பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்