by Bella Dalima 11-02-2021 | 4:44 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ்,பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் உள்ளிட்ட 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கே மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பிலே இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.