கொழும்பு, கம்பஹாவில் அதிகரிக்கும் கொரோனா

கொழும்பு, கம்பஹாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

by Chandrasekaram Chandravadani 11-02-2021 | 9:31 AM
Colombo (News 1st) இன்று (11) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 963 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. அவர்களுள் 08 பேர் வௌிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களாவர். எஞ்சிய 955 பேரில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 298 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 255 பேரும் கண்டி மாவட்டத்தில் 71 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஐவரும் மாத்தறை மாவட்டத்தில் 31 நபர்களும் பதுளை மாவட்டத்தில் ஒருவரும் புத்தளம் மாவட்டத்தில் மூவரும் நுவரெலியா மாவட்டத்தில் இருவரும் திருகோணமலை மாவட்டத்தில் இருவரும் யாழ். மாவட்டத்தில் இருவரும் மன்னார் மாவட்டத்தில் 10 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 09 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கோட்டையில் 07 பேருக்கும் கொம்பனித்தெரு பிரதேசத்தில் 09 பேருக்கும் கொள்ளுப்பிட்டியில் 06 பேருக்கும் பம்பலப்பிட்டியில் 06 பேருக்கும் நாரஹேன்பிட்ட பகுதியில் 09 நபர்களுக்கும் வெள்ளவத்தை பகுதியில் 08 பேருக்கும் பொரளையில் 10 பேருக்கும் தெமட்டகொடை பகுதியில் ஐவரும் மருதானையில் 07 பேருக்கும் கொட்டாஞ்சேனையில் ஐவருக்கும் கிரேண்ட்பாஸ் பகுதியில் 8 பேருக்கும் மட்டக்குளி பகுதியில் 32 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பகுதியில் 06 பேரும் ஹேகித்தை பகுதியில் இருவரும் கடவத்தை பகுதியில் 10 பேரும் நீர்கொழும்பில் 16 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் பகுதியில் இருவருக்கும் முருங்கன் பகுதியில் 8 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தளம் - வென்னப்புவ மற்றும் தங்கொட்டுவ ஆகிய பகுதிகளிலேயே மூவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை மற்றும் ஹங்குரான்கெத்த ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் இருவர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். சுன்னாகம் பகுதியில் ஒருவரும் தெல்லிப்பழை பகுதியில் ஒருவருமாக யாழ். மாவட்டத்தில் இருவர் தொற்றுடன் பதிவாகியுள்ளனர். கிளிநொச்சி பிரதேசத்தில் 8 பேருக்கும் பூநகரி பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இந்தநிலையில் மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று (11) காலை வரையான 24 மணி நேரத்தில் தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (11) காலை வரையான காலப்பகுதி வரை நாட்டில் மொத்தமாக 72,174 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள அதேநேரம், 65,644 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினம் (10) மேலும் 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. வத்தளை, கொழும்பு - 5, அளுத்கம, கம்பஹா மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களாவர். அதனடிப்படையில், இன்று (11) காலை வரையில் நாட்டில் 375 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.