விமல் வீரவன்சவின் வீட்டில் 12 கட்சியினர் கலந்துரையாடல்

விமல் வீரவன்சவின் வீட்டில் 12 கட்சியினர் கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2021 | 4:34 pm

Colombo (News 1st) அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் 12 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற விமல் வீரவன்சவின் வீட்டிற்கு செல்லும் போது, நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே இன்று கட்சித் தலைவர்கள் கூடியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலில் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார,  திஸ்ஸ விதாரண ஆகியோரும் பங்கேற்றிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்