ரஞ்சன் ராமநாயக்கவின் பா.உறுப்புரிமை: நீதிமன்ற உத்தரவு நீடிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவின் பா.உறுப்புரிமை: நீதிமன்ற உத்தரவு நீடிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவின் பா.உறுப்புரிமை: நீதிமன்ற உத்தரவு நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2021 | 11:09 am

Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான இன்றைய விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொராயா ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டமையால் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்