பேதங்களின்றி பாடசாலைகளுக்கு வளங்கள் பகிர்ந்தளிக்கப்படும் – யாழில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு 

பேதங்களின்றி பாடசாலைகளுக்கு வளங்கள் பகிர்ந்தளிக்கப்படும் – யாழில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு 

பேதங்களின்றி பாடசாலைகளுக்கு வளங்கள் பகிர்ந்தளிக்கப்படும் – யாழில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2021 | 2:18 pm

Colombo (News 1st) எவ்வித வேற்றுமைகளும் இன்றி கல்வி அமைச்சின் வளங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, யாழ். மறைமாவட்ட ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது கல்வி அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என எவ்வித வித்தியாசங்களும் இன்றி அனைத்து பாடசாலைகளுக்கும் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள மாணவர்களுக்கு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான தேவை குறித்தும் கல்வி அமைச்சர் இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.

வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு தேவையான அமைச்சு மட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்