பிலியந்தலை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் இந்தியாவில் கைது

பிலியந்தலை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் இந்தியாவில் கைது

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2021 | 7:34 pm

Colombo (News 1st) 2017 ஆம் ஆண்டு பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகநபரான மொஹமட் மாஹிர் மொஹமட் நவாஸ் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் இந்தியாவின் Interpol-இனால் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த குற்றத்திற்காக உடந்தையாக இருந்த மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்