சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாம்புகளுடன் ஒப்பிடுகிறார் அசாத் சாலி

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாம்புகளுடன் ஒப்பிடுகிறார் அசாத் சாலி

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாம்புகளுடன் ஒப்பிடுகிறார் அசாத் சாலி

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2021 | 6:18 pm

Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்தவர்கள் தொடர்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அறிவிப்பை அடுத்து, 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது துள்ளிக்குதிக்கத் தொடங்கியுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

20 ஆம் திருத்தத்திற்கு கை உயர்த்தி துரோகம் செய்தவர்கள் இவ்வளவு காலமும் ‘மழைக் காலத்தில் புற்றுக்குள் ஒளிந்த பாம்பு’ போல் இருந்துவிட்டு, தற்போது படமெடுத்து ஆடத் தொடங்குகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது சொந்த கடன்களை அடைப்பதற்காகவே இவர்கள் பெரமுன அரசுக்கு ஆதரவளித்து, ஜனாதிபதியை சர்வ வல்லமை பொருந்தியவராக மாற்றியதாகவும் அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்