கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 10-02-2021 | 11:12 AM
Colombo (News 1st) நேற்று (09) முதல் இன்று (10) காலை வரையான காலப் பகுதியில் நாட்டில் புதிதாக 976 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. இவர்களுள் ஒருவர் மாத்திரம் வௌிநாட்டிலிருந்து நாடு திரும்பியவராவார். ஏனைய 975 பேரில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 252 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 227 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 17 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் கண்டி மாவட்டத்தில் 150 நபர்களும் கேகாலை மாவட்டத்தில் 10 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 11 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் 11 பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் இருவரும் வவுனியா மாவட்டத்தில் மூவரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கோட்டை பிரதேசத்தில் 19 பேரும் கொம்பனித்தெரு பகுதியில் 06 பேரும் கொள்ளுப்பிட்டி பகுதியில் ஐவரும் பம்பலப்பிட்டி பகுதியில் 08 பேரும் நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் 19 நபர்களும் வெள்ளவத்தை பகுதியில் 18 நபர்களும் பொரளை பிரதேசத்தில் 39 பேரும் மருதானை பிரதேசத்தில் 18 பேரும் தெமட்டகொடை பகுதியில் 07 பேரும் புறக்கோட்டையில் நால்வரும் கொட்டாஞ்சேனை பகுதியில் 16 நபர்களும் கிரேண்ட்பாஸ் பகுதியில் 08 நபர்களும் மட்டக்குளி பகுதியில் 19 நபர்களும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் 28 பேர், வத்தளையில் 16 பேர் உட்பட கம்பஹா மாவட்டத்தில் 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (10) காலை வரையில் நாட்டில் 71,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 65,053 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் (09) மேலும் 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கெடவல, அநுராதபுரம், கபுலியத்த, குருநாகல் மற்றும் மொறட்டுவை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலுள்ள 94 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 9,062 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம், நேற்றைய தினத்தில் மாத்திரம் 14,402 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.