1500 மீட்டர் உள்ளரங்க ஓட்டப்போட்டியில் உலக சாதனை

உள்ளரங்க ஓட்டப்போட்டி: எத்தியோப்பியாவின் Gudaf Tsegay புதிய உலக சாதனை

by Bella Dalima 10-02-2021 | 5:55 PM
Colombo (News 1st) 1500 மீட்டர் மகளிருக்கான உள்ளரங்க ஓட்டப்போட்டியில் (Indoor 1500 metres) எத்தியோப்பியாவின் Gudaf Tsegay புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற உள்ளரங்க மெய்வல்லுனர் போட்டியில் அவர் இந்த சாதனையை எட்டினார். இதன்போது அவர் போட்டியை 3 நிமிடம் 53.09 ​செக்கன்ட்களில் நிறைவு செய்தார். இதற்கிணங்க, அவர் - ஏற்கனவே இருந்த சாதனையை இரண்டு செக்கன்ட்களால் முறியடித்துள்ளதாக சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை 3 நிமிடம் 59.58 செக்கன்ட்களில் நிறைவு செய்த ஐரோப்பிய சாம்பியனான பிரித்தானியாவின் லோரா மியோர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.