ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட மாட்டார்: சபாநாயகர்

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட மாட்டார்: சபாநாயகர்

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட மாட்டார்: சபாநாயகர்

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2021 | 3:41 pm

 Colombo (News 1st) நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட மாட்டார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கும் போதே சபாநாயகர் இதனை குறிப்பிட்டார்.

ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனினும், அவரது பதவியை தொடர்ந்தும் பேணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தவுடன், அடுத்த கட்ட தீமானம் அறிவிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

இதன்போது,

சர்வதேச சட்டத்தில் எந்தவொரு தண்டனைக்கும் மேன்முறையீடு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும். ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற பதவியை பேணுவது தொடர்பான தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கும். அதுவரை, பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்திற்கு வருவதற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையை ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் வழங்க வேண்டும்

என சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

எனினும், நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்திற்கு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்