by Staff Writer 10-02-2021 | 12:09 PM
Colombo (News 1st) வாகன உதிரிப் பாகங்கள் என தெரிவித்து நாட்டிற்கு வாகனங்களை கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 4 கொள்கலன்கள் நேற்று (09) கொழும்பு துறைமுகத்தில் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.
இவற்றில் 3 கொள்கலன்களில் சொகுசு கே.டி.எச் வகையைச் சேர்ந்த 9 வேன்களின் உதிரிப் பாகங்கள் காணப்பட்டதாக சுங்கம் குறிப்பிட்டுள்ளது.
மற்றைய கொள்கலனில் வாகனங்களின் எஞ்சின் உள்ளிட்ட உதிரிப் பாகங்கள் காணப்பட்டுள்ளன.
உதிரிப்பாகங்கள் என தெரிவித்து கொண்டு வரப்பட்டுள்ள இவை அனைத்தும் முழுமையான 9 வாகனங்களின் பாகங்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை பகுதியிலுள்ள வாகன நிறுவனமொன்றினால் குறித்த உதிரிப் பாகங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுளளன,
இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.