திருகோணமலை சிறு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

திருகோணமலை சிறு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

திருகோணமலை சிறு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2021 | 1:13 pm

Colombo (News 1st) திருகோணமலையிலுள்ள சிறு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

திருகோணமலை நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் துறையில் காணப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறு தொழிலுள்ள ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாரிய படகுகள், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால் தங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இறங்குதுறை மற்றும் துறைமுகத்தினூடாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ள போதிலும் இதுவரை தீர்வு கிட்டவில்லை என மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்