கழுத்துப்பட்டி அணியாமையால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றிலிருந்து வௌியேற்றம் 

கழுத்துப்பட்டி அணியாமையால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றிலிருந்து வௌியேற்றம் 

கழுத்துப்பட்டி அணியாமையால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றிலிருந்து வௌியேற்றம் 

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2021 | 10:35 am

Colombo (News 1st) கழுத்துப்பட்டியை அணியத் தவறியதால் நியூஸிலாந்தின் Maori கட்சியின் தலைவர் பாராளுமன்றத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களின் போது, வினா எழுப்பும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கழுத்துப்பட்டியை அணிந்திருப்பது கட்டாயமாகும்.

இந்நிலையில், கழுத்துப்பட்டியை அணியாது பாராளுமன்றத்திற்கு வருகை தந்த Maori கட்சியின் தலைவர் Rawiri Waititi, இரு தடவைகள் வினா எழுப்புவதற்கு முயற்சித்த போதிலும் சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அமர்விலிருந்து வௌியேறுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்